இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் அதிசய சுரங்கம்....படங்களுடன்


பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சில மாளிகைகள் இன்று வரை மர்மங்களுக்கு பெயர் பெற்று திகழ்கின்றன.

அவ்வகையில் இங்கிலாந்தில், கிரோட்டே பகுதியில் உள்ள நிழத்தின் கீழ் உள்ள மாளிகை ஒன்று இன்றும் மர்மமாக பேசப்படுகின்றது.

இந்த மாளிகை ஆச்சரியம் மிக்க வகையில் முற்று முழுதாக சிப்பிகள், மற்றும் அரிய வகை சங்குகள் போன்றவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

1835ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மர்ம மாளிகையின் உண்மையான வரலாறு மற்றும் கட்டப்பட்டதற்கான நோக்கம் போன்றவை கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.


நிலத்தின் கீழ் ஓர் சுரங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த இடம் யாரால், ஏன் அமைக்கப்பட்டது?

வெளி உலகத்திற்கு தெரியாத வகையில் இத்தனை கலைநயம் மிக்கதாக இதனை அமைத்தவர்களின் நோக்கம் என்ன? இதற்கு (உண்மையான) பதில்கள் கூறப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சுமார் 4.6 மில்லியன்கள் சிப்பிகள் மூலமாக இந்த இரகசிய சுரங்கம் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.


வித்தியாசமான கலைப்பார்வை, அமைப்பு முறை என்பவற்றோடு ஏன்? இப்படி யாருக்காக அமைக்கப்பட்டது, அத்தனை சிப்பிகளை சேகரித்து இதனை அமைத்ததன் நோக்கம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு விடைகள் கூறப்படாத காரணத்தினால் இது மர்மத் தலமாக காணப்படுகின்றது என்றாலும் தற்போது இது சிறந்ததொரு சுற்றுலாத்தலமாக மாற்றம் பெற்றுள்ளது.


பண்டைய காலத்தில் தொழில்நுட்ப அறிவு இல்லாத போது இத்தனை நேர்த்தியாக கலைச் சொட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாளிகை உண்மையில் அதிசய மாளிகையே.

 


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv