மிகவும் பிரகாசமான நட்சத்திரைத்தை நோக்கிய பயணம்: எவ்வளவு காலம் எடுக்கும் தெரியுமா?


வான்வெளியில் பல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.

எனினும் பூமியில் இருந்து பார்க்கும்போது சில நட்சத்திரங்களோ அல்லது நட்சத்திரக் கூட்டங்களோ மட்டும்தான் பிரகாசமாகத் தெரியும்.

அவற்றுள் மிகவும் பிரகாசமாக தெரிவது சிரியஸ் எனப்படும் நட்சத்திரக் கூட்டம் ஆகும்.

இதனை நோக்கிய பயணம் ஒன்றிற்கு விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஜேர்மனியில் இடம்பெற்றுவரும் இது தொடர்பான ஆய்வின் ஆரம்பத்தில் அல்பா சென்டோரி எனப்படும் நட்சத்திரத்திற்கான பயணம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இது 4.37 ஒளியாண்டுகள் தூரத்தில் காணப்பட்ட போதிலும் சூரியனிற்கு அண்மையாக காணப்படுவதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே சிரியஸ் நோக்கிய பயணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. எனினும் இதற்காக பயணத்திற்கு சுமார் 69 வருடங்கள் எடுக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

சிரியஸ் ஆனது பூமியிலிருந்து 8.6 ஒளியாண்டுகள் தூரத்தில் காணப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv