அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா....


சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க கடற்படை நேற்று முன் தினம் சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படை தளத்தை 59 டோமாஹாக் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. இதில் 6 வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அமெரிக்கா மீது எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. ஆனால் இது குறித்து அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், சிரிய ராணுவம் ரசாயன வாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். அதற்கு பதிலடி கொடுக்கவே சிரியாவின் விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மீண்டும் இது போன்ற செயல் நடந்தால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.நா.வுக்கான ரஷ்ய துணைத் தூதர் விளாடிமிர் சப்ரோன்கோவ் கூறுகையில், சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா வன்மையாகக் கண்டிக்கிறது. இது சர்வதேச விதிமீறல் என்றும் ஐ.நா. சபையின் ஒப்புதல் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட அனுமதி பெறப்படவில்லை. மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv