6 மாதங்களுக்கு முன் காலமான தாய்லாந்து மன்னர் உடல் தகனம் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல் அக்டோபர் மாதம் பாங்காக் நகரில் உள்ள பொது சதுக்கத்தில் தகனம் செய்யப்படும் என தாய்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் மன்னராக இருந்து வந்த 88 வயதான பூமிபால் அதுல்யதேஜ் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் திகதி மரணம் அடைந்தார்.

18 வயதில் மன்னரான அவர் 70 ஆண்டு காலம் பதவி வகித்து, மக்களின் அன்பைப் பெற்று, ஒன்பதாவது ராமராக கருதப்பட்டார். அவரது மரணத்தையொட்டி ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என தாய்லாந்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் வரும் அக்டோபர் மாதம் 26ம் திகதி பாங்காக் நகரில் உள்ள பொது சதுக்கத்தில் தகனம் செய்யப்படும் என தாய்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு பூமிபால் அதுல்யதேஜின் மகனும், தற்போதைய மன்னருமான மகா வஜிரலோங்காரன் ஒப்புதல் அளித்துள்ளார். இதை அரண்மனையும் உறுதி செய்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv