உலகின் மிகப்பெரிய சுரங்கப் பாதை நோர்வேயில் அமைக்க....


போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் உலக நாடுகளில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுவது வழக்கமாகும்.

இதேபோல கப்பல்கள் பயணிப்பதற்கென சுரங்கப் பாதை ஒன்று நோர்வேயில் அமைக்கப்படவுள்ளது.

இச் சுரங்கப்பாதையானது இதுவரை உலக நாடுகள் எங்கிலும் அமைக்கப்படாத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமானதாக காணப்படுகின்றது.

ஒரு மைல்கள் அளவிற்கு நீளமான இச் சுரங்கப்பாதை நாட்டின் வடக்கு மேற்காக அமைக்கப்படுகின்றது.

இதன் உயரம் 49 மீற்றர்களாகவும், அகலம் 36 மீற்றர்களாகவும் காணப்படுகின்றது. இதற்காக 312 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்படுகின்றது.

இதன் கட்டுமாணப் பணிகள் எதிர்வரும் 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2023ம் ஆண்டளவில் நிறைவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை குறித்த சுரங்கப்பாதை தொடர்பான மாதிரி புகைப்படங்கள், வீடியோ என்பனவும் வெளியிடப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv