பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப் பெட்டி: அட உண்மைதாங்க....


மின்சாரம் இல்லாமல் இயற்கையான குளிர்சாதனப் பெட்டியை பூமிக்கடியில் நெதர்லாந்து விஞ்ஞானிகள் அமைத்து சாதனை செய்துள்ளனர்.

குளிர்சாதனப் பெட்டி என்பது எல்லார் வீட்டிலும் தற்போது அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது.

குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ணப்படும் உணவுகள் உடலுக்கு கேடு என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு தீர்வு காணும் வகையில் நெதர்லாந்து விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளது தான் இயற்கை குளிர்சாதன பெட்டி.

இதற்கு மின்சாரமே தேவையில்லை. இந்த குளிர்ச் சாதன பெட்டி பூமிக்கடியில் பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள டேங்கில் குளிர்ந்த தண்ணீரை நிரப்ப வேண்டும்.

அந்தத் தண்ணீர் குளிர்சாதனப்பெட்டி முழுவதும் சீரான குளிரை ஏற்படுத்தி உணவுப் பொருட்களை பதப்படுத்துகிறது‌.

இது சாதாரண குளிர்சாதனப் பெட்டியைப் போல 20 மடங்கு அதிகமான கொள்ளளவைக் கொண்டது.

சுற்றுசூழலுக்கும், உடலுக்கு இதில் வைக்கும் பொருட்கள் நன்மை தரும் என்பதால் இது பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv