மீண்டும் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்...


2018 ஐபிஎல் தொடரில் மீண்டும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும் என முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரித்த லோதா கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.

இந்நிலையில் சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய சீனிவாசன் கூறியதாவது, 2018ல் மீண்டும் மஞ்சள் சீருடையுடன் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும், நிச்சயம் பெரிய அளவில் மீண்டும் வருவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv