முத்தையா முரளிதரனுக்கு கௌரவ விருது: ஐசிசி அறிவிப்பு....


ஐசிசி-யின் Hall of Fame விருதுக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐ.சி.சி, கிரிக்கெட் விளையாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக Hall of Fame என்னும் விருதை வீரர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த வருடத்துக்கான Hall of Fame விருது இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த விருது கெளரவிக்கும் விழாவில் முரளிதரனுக்கு ஐசிசி தொப்பியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த கௌரவிப்பின் உத்தியோகபூர்வ நிகழ்வு வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது நடைபெறும்.

இந்த விருதுக்கு தெரிவு செய்யப்படும் முதல் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv