மாரடைப்பு வருவதை அறியும் மருந்து கண்டுபிடிப்பு: பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை...


மாரடைப்பால் உயிர் இழக்கும் மக்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதயத்தின் தசையில் பிரச்சனை ஏற்படும் போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. தற்போது ஒருவருக்கு இதய தசையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும், ஏற்கனவே அவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் முறையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இரத்த பரிசோதனை மூலம் செய்யும் இந்த சிகிச்சைக்கு வெறும் 12 நிமிடங்கள் போதுமானது.

இது குறித்து பிரித்தானிய British Heart Foundation தலைவர் Nilesh Samani கூறுகையில், இரத்த பரிசோதனை முறையில் 12 நிமிடத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறியும் முறையை கண்டுபிடித்துள்ளோம்.

இதன் மூலம் பாதிப்பு உடைய நபருக்கு அவசர சிகிச்சையளிக்கபட்டு அவர் உயிரை காப்பாற்ற முடியும்.

சோதனை முயற்சியில் உள்ள இந்த முறை இன்னும் ஆறு மாதத்தில் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv