பிரித்தானியாவில் கண்டு பிடிக்கப்பட்ட பறக்கும் மனிதன்


நவீன மனித தொழில்நுட்ப அறிவு சாத்தியம் இல்லை எனும் படைப்புக்களைச் செய்து காட்டுவதற்கு முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது.

அந்தவகையில் பறக்கும் மனிதனையும் உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளார் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஒருவர்.

ரிச்சர்ட் எனப்படும் மரதன் ஓட்ட வீரர் மூலமாகவே இந்த அரிய கண்டு பிடிப்பு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆங்கிலத் திரைப்படங்களில் தனி மனிதன் இயந்திரத்தினை உடலில் பொருத்திக் கொண்டு பறந்து பல சாகசங்கள் புரிவது போல் காட்டப்படும்.

கற்பனைக்கு மட்டுமே இது சாத்தியம் என்று நினைத்தவர்களே அதிகம். ஆனால் அதனை நிஜமாக்கி காட்டியுள்ளார் பிரித்தானியாவை சேர்ந்த ரிச்சர்ட்.

விஷேடமாக தயாரிக்கப்பட்ட ஆறு ஜெட் வடிவ எஞ்சின்களை கைகளிலும், கால்களிலும் பொருத்தப்பட்டு அதன் உதவியுடன் பறந்து காட்டியுள்ளதோடு, எதிர் காலத்தில் பல சாகசங்கள் செய்யவும் காத்திருக்கின்றார் ரிச்சர்ட்.

தற்போது சோதனை அளவில் இருக்கும் இந்த பறக்கும் மனித தொழில்நுட்பம் கூடிய விரையில் சந்தைப்படுத்தப்படும் எனவும், அதனால் மனித எதிர்காலம் வியப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அவ்வகையில் எதிர்கால மனிதன் கற்பனைக்கு எட்டாத ஓர் உலகில் வாழப்போகின்றான் என்பது மட்டும் நிச்சயமாகியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv