சீனாவில் உருவாகும் பிரமாண்டம் : வியப்பில் உலக நாடுகள்....


நியூயோர்க் நகரத்தை பார்க்கிலும் மூன்று மடங்கு பாரிய நகரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சீனா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வ அரச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரச தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டின் போது சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தலைநகர் பீஜிங்கில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நகரம் அமைக்கப்படவுள்ளது. முற்றிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நகரம் அமையவுள்ளது.

அத்துடன், மக்களின் பாதுகாப்பையும், வாழ்க்கை மேம்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த புதிய நகரம் அமைக்கப்படவுள்ளதாக சீனா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகின் முன்னணி நாடுகளின் சிறப்புகளை முறியடிக்கும் வகையில், சீனா அண்மை காலமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போது நியூயோர்க் நகரை குறிவைத்துள்ளதாகவும், சீனாவின் இந்த நடவடிக்கையால் உலக நாடுகள் பலவும் வியப்பில் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv