ஃப்ளூ காய்ச்சலை தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பு,,,,


தவளையிலிருந்து கிடைக்கும் ஒரு வித பிசுப்பிசுப்பான திரவம் ஃப்ளூ காய்ச்சல் தொற்றினை தடுக்க உதவுகிறது என அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எலோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென்னிந்தியாவின் தவளை இனம் ஒன்றின் தோலிருந்து வெளிப்படும் திரவத்திலிருந்து பெறப்படும் இரசாயனத்தினை கண்டறிந்துள்ளனர்.

ஃப்ளூ காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ்களை இந்த பிசுப்பிசுப்பான திரவம் கட்டுபடுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களுக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு எதிராக செயலாற்றும் உருமின் என அழைக்கப்படும் இந்த கூட்டுப்பொருளை பயன்படுத்த முடியுமா என்பதை கண்டறிய மேற்கொண்டு ஆராய்ச்சியினை தொடர்வது அவசியமாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv