உலகிலேயே மிகப்பெரிய இதயம் இதுதான்: எவ்வளவு எடை தெரியுமா?


நீலதிமிங்கலத்தின் இதயம் ஒரு காரின் அளவு மிக பெரியதாக இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

திமிங்கலம் என்பது ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் கடல் விலங்காகும்.

உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு திமிங்கலம்தான். இதில் நீல திமிங்கலங்கள் பாடவும் செய்கின்றன. மனிதனின் மூளையை விட திமிங்கலத்தின் மூளை பெரிது தான்

ஆராய்ச்சியாளர்கள், 76.5 அடி கொண்ட ஒரு இறந்த நீல திமிங்கலத்தை கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்

அதன் உடலை அறுத்து இதயத்தை பார்த்த போது 180 கிலோவில் ஒரு காரின் அளவுக்கு இதயம் இருப்பது தெரிந்தது.

கனடாவின் ஆராய்ச்சியாளர் கூறுகையில், உலகிலேயே முதல் முறையாக தற்போது தான் இறந்த நீல திமிங்கலம் பாதுகாக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த திமிங்கலத்தின் இதயமும், எலும்புகளும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என கூறியுள்ளார்.
 
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv