வடக்கு, கிழக்கு நிலவரம் குறித்து அவுஸ்திரேலிய நகர மேயருக்கு விளக்கம்....


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவுக்கும் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்தியத்தின் டென்டிநொங் Dandenong நகர மேயர் Jim Memeti ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்தியத்தின் டென்டிநொங் Dandenong நகர மேயர் Jim Memeti உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அவர் சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அவுஸ்திரேலிய நகர மேயருக்கு விளக்கமளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும், அரசாங்கத்தால் நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்து உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv