என் மகளை திருமணம் செய்தால் 80 மில்லியன் பவுண்ட் பரிசு....ஆனால்: ஒரு தந்தையின் அறிவிப்பு...


சீனாவை சேர்ந்த பில்லியனர் தனது மகளை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 80 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையினை தருவதாக அறிவித்துள்ளார்.

Cheuk Nang Holdings Ltd- இன் நிறுவனராக இருக்கும் Cecil Chao Sze-tsung, சீனாவின் பிரபல பணக்காரர் ஆவார்.

தொழில்துறையில் சாதித்து வந்தாலும், சொந்த வாழ்க்கையில் தனது மகளின் நடவடிக்கைகள் காரணமாக நிம்மதியற்று வாழ்கிறார்.

இவரது மகள் Gigi Chao(34). ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதே அதற்கு காரணம். பலமுறை தனது மகளுக்கு அறிவுரை வழங்கியும், தனது தந்தையின் அறிவுரையை Gigi கேட்கவிரும்பவில்லை.

9 வருடங்களாக தனது தோழியுடன் நெருங்கி பழகிய இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பாரிஸில் வைத்து அவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது துணையுடன் நிம்மதியாக சேர்ந்து வாழ்வதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தனது மகளின் மாறுபட்ட வாழ்க்கை முறையை மாற்றி, அவளை இயல்பான வாழ்க்கை வாழ வைக்கவேண்டும் என ஆசைப்பட்ட Cecil Chao, ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், ஓரினச்சேர்க்கையாளராக இருக்கும் எனது மகளின் மனதினை மாற்றி, அவளை திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு 80 மில்லியன் பவுண்ட்ஸ் தொகை தருவதாக அறிவித்தார்.

ஆனால், இதுவரை எந்த ஒரு ஆணாலும் Gigi மனதை மாற்றமுடியவில்லை. இதற்கிடையில் அவர் தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஓரினச்சேர்க்கை உறவுமுறையை உலகின் சில நாடுகள் ஏற்றுக்கொண்டபோது, ஏன் உங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணுடன் நான் எவ்வாறு சந்தோஷமாக வாழ இயலும் என்பது தான் உங்களின் வருத்தமாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், அவளை நான் ஆழமாக காதலிக்கிறேன். வாழ்நாள் முழுவதும் நாங்கள் சந்தோஷமாக இருப்போம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவள் என் வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணிப்பால். எங்கள் வாழ்க்கையில், காதல், ரொமான்ஸ், அன்பு எல்லாமே இருக்கிறது.

அப்படியிருக்கையில், அவளை விட்டு பிரிந்து என்னால் வர இயலாது. எனது வாழ்க்கையை நினைத்து நான் பெருமைபடுகிறேன் என்று எழுதியுள்ளார்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv