வீட்டில் குவிந்து கிடந்த 650 கோடி ரூபாய்: அதிர்ச்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்...


நைஜீரியா நாட்டில் வீடு ஒன்றில் மூட்டையாக 650 கோடி ரூபாய் லஞ்ச ஒழிப்பு பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் உள்ள Lagos நகரில் தான் இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நகரில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் அழுக்கான உடையில் மூட்டைகளை தூக்கிக்கொண்டு அடிக்கடி வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்று பொலிசார் மற்றும் லஞ்ச ஒழிப்பு பொலிசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது, ஓர் அறையில் குவிக்கப்பட்டிருந்த மூட்டைகளை பிரித்தபோது உள்ளே கட்டுக் கட்டாக பணம் இருந்ததைக் கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பணத்தை எண்ணியபோது 43 மில்லியன் டொலர்(654,33,10,000 கோடி ரூபாய்) இருந்துள்ளது.

வீட்டிற்கு அருகில் குடியிருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது ‘இந்த வீட்டில் யாரும் வசிக்காதபோது பெண் ஒருவர் மட்டும் அடிக்கடி மூட்டைகளை தூக்கி வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மேலும், பெண் உடுத்தியிருந்த அழுக்கான ஆடைகளும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளதாக’ தெரிவித்துள்ளனர்.

எனினும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

வீடு ஒன்றில் கட்டுக் கட்டாக 43 மில்லியன் டொலர் பணத்தை லஞ்ச ஒழிப்பு பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv