அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.....ரஷ்ய எம்.பி மகனுக்கு 27 ஆண்டு சிறைதண்டனை!


வங்கி மோசடி வழக்கில் சிக்கிய ரஷ்ய எம்.பி. ஒருவரின் மகனுக்கு, அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டு சிறைதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் வாலரி சீலிஸ்னெவ் என்பவரது மகன் Roman Seleznevனுக்கே 27 ஆண்டு சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Roman Seleznev, அமெரிக்க நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் ஊருடுவி, வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை திருடியதாக கூறப்படுகிறது.

கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடிய அவர், விர்ஜினியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இணையதளங்களுக்கு விற்பனை செய்ததன், மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு 169 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பான புகாரில் கடந்த 2014ம் ஆண்டு மாலத்தீவில் வைத்து Roman Seleznev கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், Roman Seleznev 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய எம்.பி. வாலரி சீலிஸ்னெவ், தனது மகன் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, நர மாமிசம் சாப்பிடுபவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv