பிரித்தானியா வெளியேறும் தாக்கம்! சொகுசு கார்களின் விலை ரூ. 1 கோடி வரை குறைப்பு....


ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் தாக்கமாக பவுண்டின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது.

பிரித்தானியாவின் பணமான பவுண்டின் மதிப்பு சரிந்து வருவதன் தாக்கம், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாய்க்கு நிகரான பவுண்டின் சந்தை மதிப்பு 20 சதவிகிதம் வரை குறைந்துள்ளது

இதன் காரணமாக அந்நாட்டு தயாரிப்பான பிரபல ரோல்ஸ் ராய்ஸ், பெண்ட்லி, ஆஸ்டன் மார்டின், ரேஞ்ச் ரோவர் மற்றும் ஃபெராரி உள்ளிட்ட சொகுசு கார்களின் விலை இந்தியாவில் 5 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை குறைத்துள்ளன.

அதன்படி இந்த சொகுசுக் கார்களின் விலை இந்தியாவில் 20 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv