லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட 150 வீடுகளும்சுமார் 23 கோடி ரூபா....


வவுனியா - சின்ன அடம்பன் பகுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோர் இணைந்து குறித்த வீடுகளை பயனாளிகளிடம் கையளித்துள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்கள், விசேட அழைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டு, மக்களுக்கான வீடுகளை கையளித்துள்ளனர்.
லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 150 வீடுகளும் சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

லைக்காக ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகைதருவார் என முன்னதாக கூறப்பட்டாலும், பல சர்ச்சைகளைத் தொடர்ந்து குறித்த பயணம் தடைப்பட்டது.

இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி குறித்த நிகழ்வுகள் இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv