15 பேரை நேரலையில் கொலை செய்த கொலையாளியின்


அமெரிக்காவில் பேஸ்புக் நேரலையில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Ohio பகுதியில் Easter தினமான நேற்று Robert Goodwin(74) என்பவரை Stevie Steve என்பவர் பேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இதனால் அவர் இரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலே துடிதுடித்து இறந்தார்.

Stevie Steve அந்த நேரலையில் தன்னுடைய தாக்குதல் தொடரும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தை அறிந்த பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கொலையாளி இதே போன்று 15 கொலைகளை செய்துள்ளான் என்று கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பேஸ்புக் நேரலையில் நடந்த சம்பவம் பொய் இல்லை என்றும் அது உண்மை தான் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் பொலிசார் அவன் ஒரு ஆபத்தான மனிதன் என்றும் இதனால் பொதுமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கும் படியும், கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவான் என்று தெரிவித்துள்ளனர்.

அவரை கண்டால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கும்படி கூறியுள்ளனர். மேலும் இவர் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv