உலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த நபர் யார் தெரியுமா..?


டைம்ஸ் பத்திரிகை, ஒவ்வொரு ஆண்டும் 'உலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலை' வெளியிடும்.

இந்த ஆண்டு அப்படிப்பட்ட ஒரு பட்டியலை உருவாக்குவதற்கு முன்னர், ஒன்லைனில், ஒரு சர்வே நடத்தியது.

அதில், யாரெல்லாம் உலகின் செல்வாக்கு வாய்ந்த நபர்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று வாசகர்கள் நினைக்கிறார்களோ அவர்களை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த சர்வேயில், பிலிப்பைன்ஸின் அதிபர் ரோட்ரிகோ ட்யூடெர்ட், முதல் இடத்தில் வந்தார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், போப் பிரான்சிஸ் போன்றவர்கள் அடுத்தடுத்து இடங்களில் வந்தனர்.

ரோட்ரிகோ, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதவிக்கு வந்த பின்னர், போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனால், பிலிப்பைன்ஸில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்லைன் சர்வேயில் 100 பேர் கொண்ட பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த சர்வேயில் மோடிக்கு , 'பூஜ்ஜியம் சதவிகித' வாக்குகள் தான் கிடைத்தது.

- Vikatan-


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv