பிரான்ஸில் 1000த்துக்கும் மேற்பட்ட அகதிகள் காணாமல் போனதால் பரபரப்பு....


பிரான்ஸ் அகதிகள் முகாமில் தீப்பற்றி எரிந்த நிலையில் 1000த்துக்கும் மேற்பட்ட அகதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடக்கு பிரான்ஸில் பல ஆயிரம் மக்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் இரு தினங்களுக்கு முன்னர் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதில் அகதிகள் தங்கியிருந்த அனைத்து கேபின்களும் தீ விபத்தில் சாம்பலாகின. குறிப்பிட்ட இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாக தெரிகிறது.

இதில் காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர். தீக்கிரையான வீடுகளை சீராக்கும் முயற்சியிலும், வீடுகளை இழந்த அகதிகள் தங்க மாற்று ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 1000த்துக்கும் மேற்பட்ட அகதிகள் இந்த களேபரத்தில் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து பிரான்ஸின் மனிதாபிமானம் மருத்துவர்கள் குழு தலைவர் Corenne Torre கூறுகையில், அகதிகள் 1000 பேர் தற்போது காணாமல் போயுள்ளது எனக்கு கவலையளிக்கிறது.

இதில் பலர் ஆபத்தில் இருக்கலாம். பலருக்கு பிரஞ்ச் மொழி தெரியாததால் அவர்கள் வெவ்வேறு இடங்களில் சிரமப்படலாம் என கூறியுள்ளார்.

பிரான்ஸில் அகதிகள் தங்க அவ்வளவு வசதி இல்லாததால் பலர் பிரித்தானியா நோக்கி செல்ல முயல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv