1000 ரூபாய் சம்பளத்திலிருந்து...கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பூ வியாபாரி....


எந்த நிலையில் இருந்தாலும் விடாமுயற்சியுடன் உழைத்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துகாட்டாய் வாழுபவர் தான் பொல்லப்பள்ளி ஸ்ரீகாந்த் (40)

1000 ரூபாய் சம்பளத்தில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று இந்திய பூச்செடி வளர்ப்புத் துறையில் பல கோடிகளுக்கு அதிபராக இருக்கிறார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஸ்ரீகாந்த் குடும்ப வறுமை காரணமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினார்.

பின்னர் பெங்களூர் வந்த அவர் அங்குள்ள ஒரு பூ பண்ணையில் 1000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

இரண்டு வருடங்கள் தினமும் 20 மணி நேரம் கடுமையாக உழைத்து பூச்செடி வளர்ப்பு, சாகுபடி, அறுவடை செய்தல் போன்ற விடயங்களை கற்று கொண்டார்.

பின்னர் தன்னிடமிருந்த பணத்துடன் நண்பர்களிடம் சிறிது கடன் வாங்கி 20 ஆயிரம் முதலீட்டுடன் சொந்தமாக பூ வணிகத்தை ஸ்ரீகாந்த் தொடங்கினார்.

பின்னர் அவர் வீட்டில் 200 சதுர அடியில் ஓம் ஸ்ரீ சாய் பிளவர்ஸ் என்ற பெயரில் ஒரு பூக்கடையைத் தொடங்கினார்

பூ சாகுபடி செய்பவர்களிடமிருந்து பூக்களை வாங்கி அவரே பேக்கிங் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தார்.

திருமணங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கும் பூக்களை கொடுக்க அவர் வியாபாரம் பெரிதாகி கொண்டே போனது.

முதல் ஆண்டிலேயே அவருக்கு 5 லட்சம் வருமானம் வந்தது. பின்னர் அடுத்த ஆண்டு இரட்டிப்பான வருமானம் ஒரு கட்டத்தில் 5 கோடியை தாண்டியது.

பின்னர் தமிழ்நாட்டின் நீலகிரியில் வங்கியில் 15 கோடி கடன் பெற்று 10 ஏக்கர் நிலம் வாங்கி சாகுபடி செய்தார் ஸ்ரீகாந்த்.

2013 ஆண்டுமுதல், தேசிய தோட்டக்கலை வாரியத்திலிருந்த தனது ஆறு வேறுபட்ட திட்டங்களுக்காக 3 கோடி அவருக்கு மானியமும் கிடைத்திருக்கிறது.

இன்று பல நாடுகளுக்கு இவரின் பூக்கள் ஏற்றுமதி ஆகிறது. 70 கோடிக்கும் மேலே அவர் பிசினஸ் செய்கிறார்.

ஸ்ரீகாந்த்க்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தடை கற்களை உடைத்தெரியும் திறமை கொண்ட இளைய தலைமுறையினர் கனவுகள் கண்டு பல மாற்றங்களை செய்ய வேண்டும் என கூறுகிறார் ஸ்ரீகாந்த்!0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv