உலகிலேயே குண்டான பெண் இவர் தான்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை....


உலகிலேயே அதிக எடையுள்ள பெண்ணாக கருதப்படும் நபர் ஒருவர் தற்போது இந்தியாவில் எடைக் குறைப்பு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எகிப்து நாட்டை சேர்ந்த Eman Ahmed Abd El Aty என்ற பெண் பிறக்கும்போது அவருக்கு 5 கிலோ எடை இருந்துள்ளது.

இவருக்கு 9 வயதாக இருந்தபோது யானைக்கால் நோய் தாக்கியதை தொடர்ந்து இவரது உடல் உறுப்புக்கள் வேகமாக வீக்கம் அடைந்துக்கொண்டு சென்றுள்ளது.

உடல் எடை கூடிக்கொண்டு சென்றதால் வீட்டை விட்டு வெளியேற அவர் விரும்பவில்லை.

தற்போது 36 வயதை அடைந்துள்ள இவரது மொத்த எடை 500 கிலோ ஆகும். மேலும், இந்தியாவில் உள்ள மும்பை மருத்துவமனையில் எடைக்குறைப்பு சிகிச்சையில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார்.
SAIFEE HOSPITAL
கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை மேற்கொண்ட பிறகு தற்போது 100 கிலோ வரை எடையை மருத்துவர்கள் குறைத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் பேசியபோது, இது மிகவும் அரிதாக ஏற்படும் நோய். கடந்த 25 ஆண்டுகளாக இவர் வீட்டை விட்டு வெளியே வந்ததுக் கூட இல்லை.

எகிப்து நாட்டில் இருந்து பயணிகள் விமானத்தில் வர முடியாது என்பதால் இவருக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மும்பை வந்தடைந்தார்.

தற்போது சர்வதேச அளவில் தரம்மிக்க நவீன சிகிச்சைகளை அளித்து வருகிறோம்.

சாதாரண பெண்களை போல் இவரது உடல் எடையை குறைத்து தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தான் தங்களது முக்கிய குறிக்கோள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv