அமெரிக்காவில் பதற்றம்..வெள்ளை மாளிகைக்கு சீல்: பாதுகாப்பான இடங்களுக்கு ஓடும் பொதுமக்கள்...


அமெரிக்க வெள்ளை மாளிக்கைக்கு திடீர் சீல் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே உள்ள மைதானத்தில் மர்ம பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், உடனடியாக வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடந்து அமெரிக்கா பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை சற்று தொலைவிற்கு அப்பால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே மர்மமான பெட்டி அகற்றப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கலிபோர்னியாவை சேர்ந்த அவர் கையில் தண்டாயுதம் போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். அவரை பொலிசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மிக்கி பென்ஸ் ஆகியோர் வெள்ளைமாளிகையின் உள்ளே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv