வெளியானது ராணியின் இரகசிய சிக்னல்கள்: மோதிரத்தை திருப்பினால் என்ன அர்த்தம் தெரியுமா?


பிரித்தானியா ராணி எலிசபெத் பொது இடங்களில் பயன்படுத்தும் இரகசிய சிக்னல்களை அரச வரலாற்றாசிரியர் ஹ்யூகோ வைக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்.

ஹ்யூகோ வைக்கர்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ராணியின் ஆபரணங்கள் வெறும் பேஷனுக்காக மட்டும் அல்ல. உண்மையில் அது மிக முக்கியமாகப் பயன்படுகிறது.

ராணி பையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றினால், அவர் பேச்சை முடிக்க தயாராக உள்ளார் என்று ஒரு அடையாளம் ஆகும்.

ராணி பையை மேஜை மீது வைத்தால், அவர் புறப்பட தயாராக உள்ளார் என்ற அடையாளம், அதுவே ராணி திருமண மோதிரத்தை திருப்பினால், உரையாடலில் இருந்து வெளியே வர விரும்புகிறார் என்று அர்த்தமாம்.

இதே போல் பக்கிங்காம் அரண்மனையில் கூட ராணி பல்வேறு சிக்னல்களை பயன்படுத்துவார் என ஹ்யூகோ வைக்கர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv