பாதி இதயத்துடன் பிறந்த குழந்தை: தற்போது எப்படி இருக்கிறார்?


பிரித்தானியாவில் பாதி இதயத்துடன் பிறந்த குழந்தை தற்போது மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளது.

பிரித்தானியாவின் Liverpool நகரை சேர்ந்தவர் Kyle, இவர் மனைவி Francesca Alfonso (21)

இந்த தம்பதிக்கு கடந்த 2014ல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது, அதற்கு Sienna என அவர்கள் பெயர் வைத்தனர்.

Francesca 4 மாத கர்ப்பமாக இருக்கும் போதே அவர் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதயம் பாதி தான் உள்ளது என்ற அதிர்ச்சி விடயத்தை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

ஆனாலும் Francesca தன்னம்பிகையோடு குழந்தையை பெற்றெடுத்தார். சிறுமி Siennaவுக்கு வித்தியாசமான இதய நோய் உள்ளதால் அவருக்கு எல்லோரையும் போல இதயத்துக்கு இரத்த ஓட்டம் பாயாது.

பிறந்ததிலிருந்து Siennaவுக்கு இரண்டு இதய ஆப்ரேஷன் நடந்துள்ளது. மூன்றாவது மிக முக்கிய ஆப்ரேஷன் அவரின் மூன்றாவது அல்லது ஐந்தாவது வயதில் நடைப்பெறும்.

இது குறித்து Francesca கூறுகையில், Siennaவுக்கு வாரம் ஒரு முறை பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவள் இன்னும் டியூப் வழியாக தான் உணவு சாப்பிடுகிறாள்.

அவளுக்கு சர்க்கரை நோயும் உள்ளதால் ஏராளமான மருந்துகளை தினம் சாப்பிடுகிறாள் என கூறியுள்ளார்.

Siennaவுக்கு நடக்கவிருக்கும் மூன்றாவது ஆப்ரேஷனில் அவர் உயிருக்கு கூட ஆபத்து நேரலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதனால் அவருடன் வாழும் நாட்கள் அவர் பெற்றோர்கள் அணு அணுவாக ரசித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv