ஊழல் வழக்கில் சிக்கிய ஜனாதிபதி: பதவியை பறித்த நீதிமன்றம்...


தென் கொரியா நாட்டு பெண் ஜனாதிபதி ஊழல் வழக்கில் சிக்கியதை தொடர்ந்து அவரது பதவியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பறித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியா நாட்டு ஜனாதிபதியான Park Geun-hye என்பவர் மீது தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை நடத்த பெரிய நிறுவனங்களிடம் ஜனாதிபதி பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து அவர் கடந்த டிசம்பர் மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் ஊழல் விவகாரம் வெளியானதை தொடர்ந்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பாராளுமன்ற இரு அவைகளும் ஜனாதிபதிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றின.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் கொரியா வரலாற்றில் முதன் முறையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv