இலங்கையில் புதிய புரட்சி! முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் திறந்து வைப்பு...


இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் கொழும்பு டவுன்ஹோலில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகில் பயன்படுத்தப்படும் இணைய தொடர்புகளுடனான "ஸ்மார்ட் நகரம்" என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேசிய தொலைப்பேசி வலையமைப்பான மொபிடெல் கண்டுபிடிப்பு பிரிவினால் இந்த பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு இடத்தில் இருந்தும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்தி இணையத்துடன் இணைய கூடிய Internet of Things என்ற தொழில்நுட்பத்தின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தை ஸ்மார்ட் நகரமாக்கும் நோக்கில் மொபிடெல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது நடவடிக்கை இதுவாகும்.

இந்த ஸ்மார்ட் பேருந்து நிலையத்தில் அதிவேக இணையத்தள வசதிகள் வழங்கப்படுகின்றது. நிலையத்திலுள்ள பொருள் வழங்கும் இயந்திரத்தின் ஊடாக பண பயன்பாடின்றி குளிர் பானங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக நீர் தேவைப்பட்டால், பேருந்து நிலையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்திற்கு ‘water’என குறுந்தகவல் ஒன்றை அனுப்பி வைத்து, அதற்கு பதிலாக கிடைக்கும் இலக்கத்தை இயந்திரத்தில் உள்ளடக்கினால் அந்த இயந்திரம் தனது சேவையை வழங்கும்.

இதற்கு மேலதிகமாக அருகில் உள்ள ஏ.டி.ம் இயந்திரங்கள், பேருந்துகள், ரயில் நிலையங்கள் தொடர்பான தகவல்களையும் இங்கு பெற்றக் கொள்ள முடியும்.

இதேபோன்று பல ஸ்மார்ட் பேருந்து நிலையங்களை இலங்கை முழுவதும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv