பிரகாசமாய் ஜொலிக்கும் செயற்கை சூரியன்....


ஜேர்மனி அறிவியல் ஆய்வாளர்கள் உண்மையான சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை வடிவமைத்துள்ளனர்.

ஜேர்மனியின் விண்வெளி ஆய்வாளர்கள் 149 சக்தி வாய்ந்த செனான் மின்விளக்குகள் மூலம் உலகிலேயே மிகப்பெரிய சூரியனை உருவாக்கி அதை ஆராய்ச்சி மையத்தில் சோதனைக்காக வைத்துள்ளனர்.

இந்த சோதனையின் முயற்சி வருங்காலத்தில் உலகின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை செய்யும் கூடமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேலும் 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் இந்த செயற்கை சூரியன், சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv