பேஸ்புக்கில் புகைப்படத்தை வெளியிட்ட பெண்: பாசக்கார கணவன் செய்த கொடூர செயல்....


தாய்லாந்தில் இளம்பெண் ஒருவர் தமது புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் ஆத்திரமடைந்த அவரது கணவன் பெட்ரோல் ஊற்றி முகத்தை சிதைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் வட பகுதியில் அமைந்துள்ள Amphoe Chiang Kham ல் குறித்த சம்பவம் நிழ்ந்துள்ளது. இப்பகுதியில் குடியிருந்துவரும் 28 வயதான Chatchawarn Tarrin என்பவர் நெட்னாபா என்பவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணமான பொழுதில் இருந்தே கணவர் நெட்னாபா தமது மனைவி மீது மிகுந்த அக்கறையுடனும் பாசத்துடனும் இருந்துள்ளார். இது நாளடைவில் அதீத அக்கறை மற்றும் துன்புறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாரின் பேஸ்புக் பக்கத்தில் தமது அழகிய முகத்தை பதிவேற்றம் செய்துள்ளார். மட்டுமின்றி அதன் இணைப்பை தமது கணவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த நெட்னாபா தமது மனைவின் முகத்தில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். இதனால் முகம் வெந்து மிகவும் அச்சுறுத்தும் வகையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டாரின், 3 அறுவைசிகிச்சைக்கு பின்னர் தேறியுள்ளார்.

மட்டுமின்றி சிதைந்துள்ள முகத்தை சீரமைக்க மேலும் பல அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார் நெட்னாபாவை கைது செய்துள்ளனர். தற்போது விசாரணையில் இருக்கும் அவருக்கு கூடிய விரைவில் தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv