இலங்கையில் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்ய உரிமையில்லை!


நாட்டின் காணிகளை துண்டாடி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய எவருக்கும் அனுமதி கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஏசி அறைகளில் இருந்து கொண்டு செயற்படும் ஒன்றிரண்டு பேருக்கு தேவையான வகையில் நாட்டை கட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறான ஒர் நிலையை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட வேண்டும்.

மாறாக சீனா மற்றும் இந்தியாவின் தேவைக்கு அமைய உருவாக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv