இணையத்தில் ஆபாச படங்களுக்கு தடையா? கூகுள் பரபரப்பு விளக்கம்...


இன்டர்நெட் வசதி இன்று உலகெங்கிலும் உள்ள சிறிய ஊர்களில் கூட பரவி கிடக்கிறது.

இதனால் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருப்பதை மறுக்க இயலாது. அதில் முக்கியமான ஒன்று தான் ஆபாச படங்கள்.

ஆபாச படங்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன.

இதனிடையில், பெண்களைக் கேவலப்படுத்தும் ஆபாசக் காட்சிகள் மற்றும் வன்புணர்வுக் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றுவதைத் தடுக்க வேண்டும் என்ற வழக்கு பிப்ரவரி இறுதியில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றுவதை தடுக்க வாய்ப்பே இல்லை.

ஆனால், வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் அரசின் சார்பில் ஒருவர் அதை நீக்க வேண்டும் என்று சொன்னால் அடுத்த 36 மணி நேரத்திற்குள் நீக்க முடியும் என கூறியுள்ளது.

அதே சமயம் Content ID என்னும் தொழில் நுட்பம் மூலம் பெண்களுக்கெதிரான ஆபாச வீடியோக்களைப் பதிவேற்றம் செய்வதைத் தடுக்க முயற்சி செய்யலாம் என சொல்லப்பட்டாலும், அதிலும் நிறைய தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

தற்போது, கனடாவில் இருக்கும் மானிடோபா யூனிவர்சிட்டியைச் சேர்ந்த மெஹ்ர்தாத் (Mehrdad) மற்றும் பிங்க்லின் லீ (Binglin Li) ஆகியோர் இணைந்து குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காட்சிகளை பதிவேற்றம் செய்வதற்கு முன்னரே தடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv