காதலுக்கு எதிர்ப்பு! காதலனின் தாயை எரித்து கொன்ற காதலி...


இந்தியாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலனின் தாயை காதலி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சத்யவான். இவர் சுனிதா என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் காதலுக்கு சத்யவானின் தாய் சோனியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனால் சோனியா மீது சுனிதாவுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் சோனியாவை கடைத் தெருவில் சுனிதா பார்த்துள்ளார்.

அப்போது தன்னிடம் இருந்த பெட்ரோலை சுனிதா சோனியா மீது ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சோனியா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் போது சுனிதா மீதும் நெருப்பு பட்டதால் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv