வானத்தில் தெரிந்த மர்ம உருவம்: கடவுளா? ஆவியா? உண்மை சம்பவம்...கிழக்கு ஆப்பிரிக்காவில் வானத்தில் மர்ம உருவம் ஒன்று மக்கள் கண்களுக்கு தெரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான Zambiaவில் உள்ள Kitwe நகரில் புகழ்ப்பெற்ற வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் மேல் ஒரு ஆவி போன்ற உருவம் நேற்று அங்கிருந்த மக்களுக்கு தெரிந்துள்ளது.

இந்த உருவத்தை அங்கிருந்தவர்கள் பலர் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.

இதை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், 100 அடி உயரத்தில் அந்த உருவம் வானத்தில் மிதந்தபடி அரை மணி நேரம் இருந்தது.

கீழே இருந்த வணிக வளாகத்தை பார்த்த படி இருந்த அந்த மர்ம உருவத்தை பலர் கடவுளின் உருவம் என கூறி வணங்கினார்கள்.

அதே போல பலர் உருவத்தை பார்த்து பயந்து அங்கிருந்து ஓடி விட்டனர் என கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv