அரசியல் அந்தஸ்திற்காக காத்திருக்கும் 85 கட்சிகள்....


அரசியல் கட்சியாக தங்களை பதிவு செய்து கொள்வதற்காக 85 கட்சிகள் வரிசையில் காத்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்சிகளை, அரசியல் கட்சிகளாக பதிவு செய்து கொள்வதற்கு கடந்த பெப்ரவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் குறித்த கட்சிகள் இவ்வாறு பதிவிற்காக விண்ணப்பம் செய்துள்ளன.

விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தேவை ஏற்பட்டால் விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர் என தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னரும் தபால் மூலம் சில கட்சிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

இவ்வாறு காலம் கடந்த விண்ணப்பங்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரி ஞாயிறு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv