லண்டனில் இருந்து நியூயார்க்கிற்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்....


மின்னல் வேகத்தில் பயணம் செய்யகூடிய சூப்பர் சோனிக் பயணிகள் விமானம் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் விர்ஜின் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், ’பேபி பூம்’ என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு விமானத்தை தயாரித்து வருகிறார்.

இதுவரை இந்த விமான தயாரிப்புக்கு 21 கோடி செலவாகியுள்ளது. பேபி பூம் விமானத்தில் என்ஜினீயரிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.

இந்த விமானம் மணிக்கு 2,335 கி.மீ வேகத்தில் போகும் படி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் மூலம் ஜப்பானின் டோக்கியோவில் இருந்து சான் பிரான்ஸிகோவிற்கு 5 மணி நேரங்களில் பயணம் செய்ய முடியும்.

அதே போல லண்டனில் இருந்து நியூயோர்க் நகருக்கு 3 மணி 15 நிமிடத்தில் பயணம் செய்ய முடியும்.

சோதனைகள் முடிந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த விமானத்தின் சேவை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv