30 மருத்துவர்கள் 17 மணி நேர அறுவைசிகிச்சை: மரணத்தையே ஏமாற்றிய பிரித்தானியர்....


பிரித்தானியாவில் புற்றுநோய் காரணமாக உடலின் முக்கிய உறுப்புகளை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட நபர் ஒருவர் மரணத்தை வென்று சாதித்துள்ளார்.

பிரித்தானியாவின் வட யார்க்ஷயர் பகுதியில் குடியிருந்து வருபவர் 37 வயதான Adam Alderson. இவர் மிக அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களால் கண்டறியப்பட்டார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட மிக முக்கியமான அறுவைசிகிச்சையில் இவரது உடலில் இருந்து 10 உறுப்புகளை மருத்துவர்கள் அகற்றும் நிலை ஏற்பட்டது.

30 மருத்துவர்கள் தொடர்ந்து 17 மணி நேரம் மேற்கொண்ட அறுவைசிகிச்சையின் விளைவாக இவரது உடலில் இருந்து 10 கிலோ அளவில் புற்றுநோய் கட்டிகளை அகற்றினர்.

இதில் அவரது வயிற்றுப்பகுதி, சிறு குடல், பெருங்குடல், கணையம், மண்ணீரல், பித்தப்பை மற்றும் வயிற்று சுவர் மட்டுமின்றி கல்லீரலின் ஒருபகுதி என அகற்றப்பட்டது.

இதனையடுத்து இவருக்கு உறுப்பு மாற்று அறுவைசிக்கிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நான்கு வாரம் மட்டுமே உயிர் பிழைப்பார் என மருத்துவர்களால் நாள் குறிக்கப்பட்ட ஆதம் தற்போது அவரது விடாப்பிடியான குணத்தால் தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார்.

ஆதமுக்கு பல ஆண்டுகளாக குடால் சார்ந்த பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்த அவருக்கு தனது உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல் குறித்த கவனம் திரும்பியது.

உடனடியாக மான்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள புற்றுநொய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற சிகிச்சையின் விளைவாக வரலாற்றிலேயே நான்காவது நபராக மரணத்தையே ஏமாற்றி உயிர் பிழைத்துள்ளார்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv