சுவிஸை உலுக்கிய இரட்டைக்கொலை: டிஎன்ஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்


சுவிட்சர்லாந்தை உலுக்கிய இரண்டு கொலைகளையும் ஒரே குற்றவாளி தான் செய்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2015 டிசம்பர் 15ம் திகதி Laupen BE பகுதியில் ஜோடி ஒன்று மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

சம்பவயிடத்தை ஆய்வு செய்த பொலிசார் குற்றவாளியின் டிஎன்ஏவை கைப்பற்றி சோதனை செய்தனர்.

தற்போது, குறித்த குற்றவாளியின் டிஎன்ஏவும் 2010 சூரிச் நகரில் இடம்பெற்ற வேறொரு கொலை குற்றவாளியின் டிஎன்ஏவும் ஒன்றே என பொலிசார் நிரூபித்துள்ளனர்.

இதன் மூலம் இரண்டு கொலைகளையும் செய்தது ஒரு குற்றவாளி என பேர்ன் மாகாண பொலிசாரும், சூரிச் மாகாண பொலிசாரும் அறிவித்துள்ளனர்.

2010 சூரிச் நகரில் 56 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இந்த இரண்டு வழக்குகளும் தீர்க்கப்படாத இருந்த நிலையில் தற்போது இரண்டு கொலைகளையும் ஒரே குற்றவாளி செய்துள்ளான் என பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.

குறித்த டிஎன்ஏ ஒரு நபருடையது என உறுதிசெய்துள்ள பொலிசார், மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், குற்றவாளியை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 30,000 பிராங்குகள்(இலங்கை மதிப்பில் கிட்டதட்ட 45 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv