25 ஆயிரம் முறை தோன்றிய வேற்றுக்கிரகவாசிகள்! அது எவ்வாறு இருக்கும்?! விஞ்ஞானிகள் விளக்கம்


வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் உலகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றது.

வேற்றுகிரகவாசிகள் பூமியை தவிர வேறு எங்கும் இல்லை என்பது சிலரின் கருத்தாகும். எனினும் பூமியை தவிர்த்து பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு உயிரினங்கள் உலகில் வாழக்கூடும் என மேலும் சிலர் தெரிவிக்கின்றனர்.

எப்படியிருப்பினும் மனிதர்கள் எதிர்காலத்தில் வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்தல் அதன் உருவம் எப்படியிருக்கும் என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் சிலர் புதிய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மனிதர்களினால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள வேற்றுகிரகவாசிகள், இயந்திர உயிர்வாழ்வு உயிரினமாக காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானி நீல்டெய்ஸன் தெரிவித்துள்ளார். அவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ள முடியுமா என தங்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுவரையில் ஒரு வருடத்திற்குள் அமெரிக்காவினுள் அடையாளப்படுத்தப்படாத பறக்கும் உயிரினங்கள் 25 ஆயிரம் முறை காட்சியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூமியில் வளர்ச்சியடைந்த உயிரினங்கள் வாழ்கின்றதென்றால் அது மனிதர்களை உயர்வான நிலையடைந்திருக்கும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது மனிதன் வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், இயந்திர உயிரினம் எனப்படும் ரொபோக்கள் அதிகமாக உருவாக்கப்படுகுிறது. இந்த ரொபோக்கள் எதிர்காலத்தில் பூமியில் முழுவதுமாக பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் சாதாரண மனிதனின் மூலையில் சிப் போன்ற ஒரு கருவி உட்பட பொருத்தப்படவுள்ள நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிருடன் ஒரு வேற்றுகிரகவாசியை கண்டுபிடித்தால் அதன் உடம்பில் ஒரு பகுதியாவது இயந்திரம் காணப்படும் என குறித்த விஞ்ஞானி குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv