உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார் தெரியுமா?


2017ம் ஆண்டின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் மைக்ரோசாப்ட் நிறுவனரான அமெரிக்காவை சேர்ந்த 61 வயதான பில் கேட்ஸ் நான்காவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். பில் கேட்ஸின் சொத்த மதிப்பு 86 பில்லியன் அமெரக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக Berkshire Hathaway நிறுவனர் அமெரிக்காவை சேர்ந்த 86 வயதான வாரன் பப்பெட் 75.6 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் உள்ள சொத்துக்களுடன் இரண்டாமிடம் வகிக்கிறார்.

72.8 பில்லியன் அமெரிக்க டாலருடன் மூன்றாவது இடத்தில் அமேசன் நிறுவனர் ஜெப் பிஸோஸ், 71.3 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஸ்பெயினை சேரந்த Amancio Ortega நான்காவது இடத்திலும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் 5ம் இடமும், மெக்ஸிக்கோவை சேர்ந்த தொலைத் தொடர்பு அதிபர் Carlos Slim Helu 6வது இடத்திலும், ஆரக்கிள் இணை நிறுவனர் லார்ரி எல்லிசன் 7வது இடமும் பிடித்துள்ளனர்.

Charles Koch, David Koch ஆகியோர் 8வது இடமும், Michael Bloomberg 10வது இடமும் பிடித்துள்ளனர். முதல் பத்து இடத்தில் 8 அமெரிக்கர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 23.2 பில்லியன் அமெரிக்க டொலருடன் 33வது இடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டில் இருந்து 220 இடங்கள் பின்தங்கி பட்டியலில் 544-வது இடத்தில் உள்ளார்.

உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டிலிருந்து 13 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 565 கோடீஸ்வரர்கள் உள்ளனர். அடுத்ததாக சீனாவில் 319 கோடீஸ்வரர்கள் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv