டொனால்ட் ட்ரம்பின் கார் விலை எவ்வளவு தெரியுமா? மிரள வைக்கும் வசதிகள்...


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பயன்பாட்டிற்காக 1.2 மில்லியனில் பல சிறப்புகளை கொண்ட சொகுசு கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உபயோப்படுத்த லிமோசின் ரக சிறப்பு கார் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாத கடைசியில் இந்த கார் வெள்ளை மாளிகைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்கள்:

காரின் மொத்த எடை 8 டன்னாகும்

துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்டாலும் அவை தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டவை.

ராக்கெட் தாக்குதலால் கூட இந்த காரை ஒன்றும் செய்ய முடியாது

4 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த காரில் தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட சாதனங்களும் உள்ளது.

டீசல் டேங்க் வெடித்து சிதறாமல் இருக்கும் வகையில், தனித்துவமான நுரை உடைய தீயணைப்பு கருவி இதில் உள்ளது.

வெடிகுண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவூட்டப்பட்ட ஸ்டீல் பிளேட் பாதுகாப்பு கொண்ட இந்த காரில் தோட்டாக்கள் துளைத்தால் பஞ்சராகாத டயர் பொருத்தப்பட்டுள்ளது.

இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் வகையில் இயங்கும் ககெமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv