ஜனாதிபதி டிரம்ப் இதுவரை எத்தனை முறை பொய் சொன்னார் தெரியுமா?


அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் டொனால்டு டிரம்ப் இதுவரை தினசரி நான்கு பொய்கள் வரை சொல்லியிருப்பதாக உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தமது அதிரடி நடவடிக்கைகளால் வரவேற்பையும் அதேபோன்று கடுமையான எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார். இதில் தற்போது அவர் தேவையின்றி அதிகம் பொய் சொல்வதாக ஊடகங்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜனாதிபதியான பின்னர் தமது முதல் 35 நாட்களில் டிரம்ப் 133 முறை பொய் கூறியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தினசரி 4 முறை என உண்மை கண்டறியும் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தனது பதவியேற்பு விழாவில் அதிக மக்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்ததாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் முந்தைய ஜனாதிபதி ஒபாமாவின் பதவியேற்பு விழாவிற்கு கூடிய கூட்டைதை விடவும் மிகவும் குறைவு என புள்ளிவிவரங்களுடன் தகவல் வெளியானது.

சமீபத்தில் ஸ்வீடன் குறித்து அப்பட்டமான தகவல் ஒன்றை வெளியிட்டு, அந்த விவகாரம் பூதாகரமானதும், சர்வதேச செய்தி ஊடகத்தில் அப்படி ஒரு தகவல் வெளியானது எனவும், அதையே தாம் மேற்கோள் காட்டியதாகவும் பொய்யான தகவலை மீண்டும் சுட்டிக்காட்டி அந்த விவகாரத்தில் இருந்து தப்பினார் டிரம்ப்.

மட்டுமின்றி, ஜனாதிபதி டிரம்பின் முதல் நூறு நாட்களில் தினசரி ஏதேனும் ஒரு பொய்யான தகவலை வெளியிட்டு ஊடகம் மற்றும் பொதுமக்களை குழப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv