டிரம்பை கடுமையாக விமர்சித்த பிரித்தானியா இளவரசர்கள்! என்ன சொன்னார்கள் தெரியுமா?


பிரித்தானியா இளவரசர் ஹரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பையும், அவரின் அரசியல் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவியுடன் பிரித்தானியாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிரித்தானியா மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளவரசர் ஹரி தனது நண்பர்களிடம், டிரம்ப் ஒரு முட்டாள். அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது பயங்கரமானது என தெரவித்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி டிரம்பின் அரசியல் கொள்கைக்கும் ஹரி கடும் கண்டனம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மனித உரிமைகளுக்கு தீவிர அச்சுறுத்தல் என ஹாரி நினைப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது பணியை ஆரம்பித்த நாள் முதல் ஹரி டிரம்ப் பற்றி விமர்சித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இளவரசர் வில்லியமும் தனிப்பட்ட முறையில் தனது கண்டனத்தை வெளிபடுத்தியாக தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தகவல் அனைத்தையும் கென்சிங்டன் அரண்மனை மறுத்துள்ளது. மேலும், இளவரசர் ஹரி எப்போதும் மிகவும் கவனமாக பேசுவார் என தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv