செவ்வாய் கிரகத்தில் வெள்ளம் ஏற்படும் நிலை காணப்படுவதாக தகவல்....


மிகவும் அண்மித்த காலப்பகுதியில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் வழிந்தோடி சென்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்ட நீண்ட ஆய்வின் பின்னர் இந்த விடயம் கண்கானிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சிலர் Geophysical Research இதழில் புதிய கடிதம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய செவ்வாய் கிரகத்தில் வெள்ள நீர் நிலைமை ஏற்பட்டுள்ள மையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாலைவனங்களில் இடைக்கிடை எப்போதாவது மழை மற்றும் வெள்ளம் போதும் நிலைமை ஏற்பட்டு நதி மற்றும் நீர் நிலைகள் தற்காலிகமாக ஏற்படும் வகையிலான நிலைமை ஒன்று செவ்வாய் கிரகத்திலும் காணப்படுவதாக அயர்லாந்து பட்லின் நகரில் உள்ள ட்ரினிட்டி வித்தியாலயத்தின் பேராசிரியர் மேரி பர்கே தெரிவித்துள்ளார்.

நீர் பாரிய அளவு அடித்து சென்மையின் ஊடாக மண் மீது நீர் பதிவுகள் பல செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்ற கருத்தினை ஒரே முறையில் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும், நீர் காணப்பட்டால் உயிரினங்கள் வாழ்வதற்காக அனைத்து சூழலும் காணப்படும் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv