செப்சிஸ் என்றால் என்ன? ஜெயலலிதாவின் உயிரை பறித்த நோயை பற்றிய விரிவான தகவல்


சர்வதேச அளவில் குணப்படுத்துவதில் கடினமான, சில நேரங்களில் உயிரைக் கூட பறிக்கும் வியாதிகளில் செப்சிஸ் என்ற கொடிய வியாதியும் அடங்கும்.

செப்சிஸ் என்றால் என்ன?

ஒரு நபரின் உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டு அது தீவிரமாக அதிகரிக்கும் நேரத்தில் உருவாவது தான் செப்சிஸ் என்ற உயிரை பறிக்கும் வியாதி.

ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது பல வியாதிகளை தடுக்கும் திறன் கொண்டது. ஆனால், சில நேரங்களில் தொற்றுநோய்கள் ஏற்படுத்தும் விளைவுகளை இந்த நோய் எதிர்ப்பு சக்தி கட்டுப்படுத்தும் பலத்தை இழக்கவும் நேரிடுகிறது.

ரத்த ஓட்டத்தில் உள்ள தொற்று நோய்களை குணப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தியான சில வேதிப்பொருட்களை அனுப்புகிறது. இவ்வாறு அனுப்பப்படும் வேதிப்பொருட்கள் எதிர்வினையாக மாறி உடல் முழுவதும் அழற்சி அல்லது வீக்கத்தையும் ஏற்படுத்தக் காரணமாக அமைகிறது.செப்சிஸ் நோயின் அறிகுறிகள் என்ன?

செப்சிஸ் நோயில் 3 கட்டங்கள் உள்ளன. ஒன்று, செப்சிஸ், இரண்டாவது தீவிர செப்சிஸ், மூன்றாவது செப்டிக் ஷாக் எனப்படும் உடல் உறுப்புக்களை அழுக்கச்செய்யும் செப்சிஸ் ஆகும்.

மருத்துவமனையில் ஒரு வியாதிற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தாலும் கூட, இந்த செப்சிஸ் நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது.


செப்சிஸ்

காய்ச்சல் 101 பாரன்ஹீட்டிற்கு அதிகமாகவும் அல்லது உடல் வெப்பம் 96.8 பாரன்ஹீட்டிற்கு குறைவாகவும் இருப்பது.
இதய துடிப்பானது நிமிடத்திற்கு 90-க்கும் அதிகமாக இருப்பது.
நிமிடத்திற்கு 20-க்கும் அதிகமாக எண்ணிக்கையில் மூச்சு வாங்குவது.
சந்தேகத்திற்குரிய அல்லது உறுதி செய்யப்பட்ட தொற்றுநோய் ஏற்பட்டு இருப்பது.


தீவிர செப்சிஸ்

  • உடல் உறுப்புக்கள் செயலிழக்க தொடங்கும்போது இந்த தீவிர செப்சிஸ் ஏற்படுகிறது.
  • உடல் தோலில் நிறம் மாறியிருப்பதற்கான அடையாளங்கள்
  • சிறுநீரின் அளவு குறைந்து வருவது.
  • சிந்திக்கும் அல்லது நினைவுகள் தொடர்பான மூளையின் செயல்பாட்டில் மாற்றம் காணப்படுவது.
  • ரத்தத்தில் உள்ள செல்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவது.
  • மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது.
  • இதயம் சீராக இயங்காமல் இருப்பது.
  • உடலில் குளிர்ச்சி அதிகமாக காணப்படுவது.
  • சுயநினைவின்மை
  • உடலில் அதிகபட்சமான பலவீனம் காணப்படுவது.


செப்டிக் ஷாக்

குறைந்த ரத்த அழுத்தத்துடன் தீவிர செப்சிஸ் ஏற்படுவது தான் செப்டிக் ஷாக் எனப்படுகிறது. இந்த கட்டத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவது கடினம் எனக் கூறப்படுகிறது.

செப்சிஸ் மற்றும் செப்டிக் ஷாக் அறிகுறிகள்

நிமோனியா காய்ச்சல்
வயிற்றில் நோய்த்தொற்று
சிறுநீரக நோய்த்தொற்று
ரத்த ஓட்டத்தில் நோய்த்தொற்று

செப்சிஸ் நோய் யாரை அதிகமாக பாதிக்கும்?

சில நபர்களுக்கு நோய்த்தொற்று தீவிரமாக ஏற்பட்டாலும் கூட, யாருக்கு மேண்டுமானாலும் இந்த செப்சிஸ் நோய் தாக்கலாம். இவர்களில் அதிகளவில் பாதிப்படைவர்கள் இதோ

இளம்வயதினர் மற்றும் வயது முதிந்தவர்கள்
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள். குறிப்பாக, எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயிற்கு சிகிச்சை பெறுபவர்கள்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தங்கியிருக்கும் நோயாளிகள்
உடலை துளையிட்டு பொறுத்தப்படும் மருத்துவ சாதனங்கள் மற்றும் பிற கருவிகளாலும் நோயாளிக்கு செப்சிஸ் ஏற்படவாய்ப்புள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv