சிறந்த வலிநிவாரணியாகும் கடல் வாழ் நத்தையின் நஞ்சு


உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளுக்கும் நிவாரணம் தரக்கூடிய வகையில் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் அமெரிக்காவில் Opioid எனப்படும் மாத்திரையும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இம் மாத்திரையினை அளவுக்கு அதிகமாக உள்ளெடுப்பதால் நாள்தோறும் 90 பேர் அமெரிக்காவில் மரணிப்பதாக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இப் பிரச்சினைக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது கடலில் வாழும் Conus regius எனப்படும் சிறிய வகை நத்தையின் நச்சுப் பதார்த்தமானது வலி நிவாரணியாக செயற்படக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

இதனை Opioid மாத்திரைக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என குறித்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவ் வகை நத்தைகள் கரீபியன் கடற்பகுதிகளிலேயே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv