மேடையில் தான் வாங்கிய ‘கிராமி’ விருதை இரண்டாக உடைத்த பிரபல பாடகி...


அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ‘கிராமி’ விருதை இரண்டாக உடைத்த பாடகி - பாதியை பிரபல அமெரிக்க பாடகி பெயான்ஸ்-க்கு பகிர்ந்தளித்த சம்பவம் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இசையுலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ‘கிராமி’ விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 5 பட்டியலின்கீழ், பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகியான அடேல் அனைத்து விருதுகளையும் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டின் சிறந்த இசை ஆல்பம், சிறந்த இசைதட்டு, சிறந்த பாடல், சிறந்த பாப் பாடகி, சிறந்த பாப் பாடல் ஆல்பம் ஆகிய ஐந்து விருதுகளையும் இவர் பெற்றார். அடேலின் தமிழ்ப்பாடலான ‘ஹலோ’, இசை ஆல்பமான '25' ஆகியவற்றுடன் போட்டியிட்ட பிரபல அமெரிக்க பாடகியான பெயான்ஸ் பாடியிருந்த ‘லெமனேட்’ என்னும் ஆல்பம் 9 பிரிவுகளின்கீழ் கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

எனினும், பாரம்பரிய இசை மற்றும் சிறந்த வீடியோ ஆல்பம் ஆகிய இரு கிராமி விருதுகளை ‘லெமனேட்’ வென்றது.

அடேல் உடம் போட்டியிட்ட பிரபல பாடகி பெயான்ஸ், விருதுக்கான வாய்ப்பை இழந்தபோதும், விழா மேடையில் தனது இசை மழையால் ரசிகர்களை மகிழ்வித்தார். ஐந்து விருதுகளை வென்று வெற்றிக் களிப்பில் மகிழ்ந்த அடேல், தனது ஏற்புரையின்போது பெயான்ஸை வெகுவாக புகழ்ந்து, பாராட்டி பேசினார்.

பின்னர், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டவராக ஒரு கிராமி விருதை இரண்டாக உடைத்து, இந்த பாதி பெயான்ஸ்-க்கு சேர வேண்டியதாகும், என்று ஒரு துண்டை பெயான்ஸ்-க்கு அளித்தபோது அரங்கத்தில் இருந்த நடுவர்கள் மற்றும் ரசிகர்கள் நெகிழ்ந்துப்போய் பலத்த கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்துள்ளனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv