அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி வல்லரசாகும் சீனா...

2050ம் ஆண்டில் வல்லரசு நாடுகளில் பட்டியலில் சீனா முதலிடத்தை பிடிக்கும் என பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிடபிள்யூசி என்ற ஆய்வு நிறுவனம் 2050ம் ஆண்டில் உலக நாடுகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தியது.

பொருளாதார நிலையை வைத்து பார்க்கும் போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் சீனா, இந்தியா முன்னணி வகிக்கும் என கணித்துள்ளது.

சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா மூன்றாம் இடத்திலும், இந்தோனேசியா, பிரேசில், ரஷ்யா, மெக்ஸிகோ, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், துருக்கி, பிரான்ஸ், சவுதி அரேபியா, நைஜிரியா, எகிப்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv