பிரான்சிலேயே இந்த நகரம் தான் டாப்!


பிரான்ஸ் நாட்டில் உள்ள Nantes நகரம் பணி மற்றும் தொழில் சம்மந்தமான விடயங்களுக்கு சிறந்த நகரமாக திகழ்ந்து வருவதாக அறியப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பல நகரங்கள் உள்ளன, அதில் எது பொருளாதாரம், பணி மற்றும் தொழில் விடயத்தில் சிறந்து விளங்குகிறது என சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் Nantes நகரம் முன்னணி வகிக்கிறது, இதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன.

இங்கு பாரீஸ் நகருக்கு நிகரான சீரான பொருளாதாரமும், தொழில் துறை அடிப்படையும் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

Nantes நகரில் இயங்கும் நிறுவனங்கள் புதிய விடயத்தை சிறப்பாக கண்டுப்பிடிப்பதில் சிறந்து விளங்குகின்றன.

ஒவ்வொரு வருடமும் தோராயமாக 7500 பேர் வேறு நகரிலிருந்து Nantes நகருக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள்.

அதே போல பல தொழில்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் Nantes நகருக்கு இடம்பெயர்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது முக்கிய விடயமாகும்.

கடந்த 2016ஆம் வருடத்தில் மட்டும் 86 நிறுவனங்கள் Nantes க்கு இடமாறுதல் அடைந்துள்ளன என்பதும், அதன் மூலம் 1400 பேர் என்ற அளவு மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv